மேலும் செய்திகள்
இன்று இனிதாக >> திருப்பூர்
10-Apr-2025
விழுப்புரம்: விழுப்புரம் ராகவன்பேட்டை, மாரியம்மன் கோவில் தேர் திருவிழா உற்சவம், நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.நிகழ்ச்சியையொட்டி, ஊர் எல்லையில் இருந்து, மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல் மற்றும் காத்தவராயன், பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது.திரளான பக்தர்கள் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வரும் 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. விழா ஏற்படுகளை ராகவன்பேட்டை பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
10-Apr-2025