மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
18-May-2025
செஞ்சி : செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன், செஞ்சி கோட்டை பூவத்தம்மன், செல்லியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், அர்ச்சனையுடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி இரவு செல்லியம்மன், பூவாத்தமமன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு பூங்கரகம் ஊர்வலமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை பூங்கரகம் வீதி உலாவும், பகல் 1 மணிக்கு சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 6 மணிக்கு மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்களும், இரவு 9 மணிக்கு மாரியம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு கும்ப படையலும் நடந்தது. தொடர்ந்து இரவு வாண வேடிக்கையுடன் பூங்கரகம் மற்றும் சாமி வீதி உலா நடந்தது. நேற்று பூங்கரகம் ஊர்வலம் மற்றும் பூங்கரகம் பிரிதல் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
18-May-2025