மேலும் செய்திகள்
நாளை மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
09-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நாளை 10ம் தேதி, மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி, அனைத்து மது கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் மற்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, மகாவீர் ஜெயந்தி தினம் விடுமுறையாக அறிவித்து டாஸ்மாக் மது கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என அரசு நெறிமுறை வரையறுத்துள்ளது. அதன்படி மகாவீர் ஜெயந்தி தினமான நாளை ஏப்.10ம் தேதி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என, கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார்.
09-Apr-2025