உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

துாய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு துாய்மை பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில பொருளாளர் நிலாஒளி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் தனசெல்வி, மாவட்ட தலைவர் சாந்தி முன்னிலை வகித்தனர். அரசு பணியாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சிங்காரம், மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில தலைவர் செல்வராஜ்கோரிக்கை விளக்க உரையாற்றினர்.முன்னாள் மாநில தலைவர் லட்சுமி, ஊராட்சி உதவி இயக்குனர் சங்கம் ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் துாய்மைப் பணியாளர்களுக்கு பல்நோக்கு மருத்துவபணியாளர் பணி வழங்க வேண்டும்.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் அதிகளவில் வருவதால், அதற்கேற்ப கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி, பணி வழங்க வேண்டும், பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான உயர்ந்தபட்ச தினக்கூலியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி