சரஸ்வதி எக்ஸல் பள்ளி 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சோழகனுார் சரஸ்வதி எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.மாணவி புகழரசி 489 மதிப்பெண், மாணவர்கள் தேவகுமரன் 464, லோகேஷ் 456, மாணவி துர்கா மற்றும் கோவர்தினி ஆகியோர் தலா 451 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் ஒரு மாணவி நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். சாதனைபடைத்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி நிர்வாகி முத்து சரவணன், நிர்வாக அலுவலர் முத்து சிவஞானம், பள்ளி முதல்வர் இந்துமதி, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாராட்டினர்.