உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சங்கராபுரத்தில் எஸ்.பி.,ஆய்வு

சங்கராபுரத்தில் எஸ்.பி.,ஆய்வு

சங்கராபுரம், : கள்ளக்குறிச்சியில் புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., சமய்சிங் மீனா சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மாலை ஆய்வு செய்தார்.ஸ்டேஷன் வளாகத்தை பார்வையிட்ட பின் நிலுவையில் உள்ள குற்றவழக்குகளை விரைந்து முடிக்க உத்திரவிட்டார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி ஆகியோர் இருந்தனர்.பின் நிருபர்களிடம் எஸ்.பி.,கூறும் போது,''கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ