உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி செவன்த்டே ஒயிட் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் டாக்டர் திரவியராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், வழக்கறிஞர் கிேஷார் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அதிசயம் வரவேற்றார். புதுச்சேரி பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ரமேஷ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினார்.தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சார் பதிவாளர் சூரியா, இந்தியன் வங்கி மேலாளர் ஜாவித் அகமது, பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு , சாத்தனுார் ஊராட்சி தலைவர் விமலா தமிழரசன், சபை பொருளாளர் கிறிஸ்து ராஜா, செயலாளர் அலெக்சாண்டர் ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி