உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா/

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பனங்குப்பம் ஜான்டூயி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி ஆண்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் விஜயா வரவேற்றார். பள்ளி தாளாளர் வீரதாஸ், கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின், நிர்வாகத் தலைவர் வாலண்டினா லெஸ்லி, கல்வி நிர்வாகத் தலைவர் சுகன்யா ராபின் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிவக்குமார், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் சிவகாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.விழாவில், மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி