உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மாணவி மாயம் : போலீஸ் விசாரணை

பள்ளி மாணவி மாயம் : போலீஸ் விசாரணை

கோட்டக்குப்பம்: பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் விஜயக்குமார். இவரது மகள் வித்தியா (எ) திவ்யா, 17; இவர் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 20ம் தேதி புதுச்சேரிக்கு செல்வதாகக்கூறி, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை