விழுப்புரம்: எஸ்.ஐ.ஆர்., சீராய்வு பணியை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிடக்கோரி, விழுப்புரம் மாவட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் வரவேற்றார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., மற்றும் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., சீராய்வை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வேண்டும். பா.ஜ., அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்குடன் எஸ்.ஐ.ஆர்., செயல்படுத்துவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். வி.சி., பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., தி.மு.க., மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், காங்., மாநில துணைத் தலைவர்கள் குலாம் மொய்தீன், ரங்கபூபதி, மாவட்ட தலைவர்கள் சீனுவாசகுமார், ரமேஷ். மா.கம்யூ., ராமமூர்த்தி, இந்திய கம்யூ., மாநிலக்குழு சரவணன், மாவட்ட செயலாளர் சவுரிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், சீத்தாபதி சொக்கலிங்கம், செந்தமிழ்ச்செல்வன். தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், மக்கள் நீதி மைய மண்டல செயலாளர் ஸ்ரீபதி உட்பட பலர் பங்கேற்றனர். தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.