மேலும் செய்திகள்
இன்று இனிதாக திருப்பூர்
01-May-2025
கோட்டக்குப்பம்:சின்னகோட்டக்குப்பம் முத்துமாரியம்மன், செண்பகவள்ளி சமேத செம்புலிங்கேஸ்வரர் கோவிலில் மகோற்சவ விழா துவங்கியது. வானுார் அருகே சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள முத்துமாரியம்மன், செண்பகவள்ளி சமேத செம்புலிங்கேஸ்வரர் கோவில் மகோற்சவ விழா, நேற்று முன்தினம் காலை 9.00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை துவங்கியது.மதியம் 3.00 மணிக்கு, மலை மேட்டிற்கு சென்று பொங்கலிட்டு அபிஷேக, ஆராதனை செய்து கரகத்தோடு புறப்பட்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9.00 மணிக்கு கொடியேற்று விழா நடந்தது.நேற்று இரவு 7.00 மணிக்கு அம்மன் பூங்கரகத்தோடு வீதியுலா செல்லும் உற்சவம் நடந்தது. இன்று காலை 11.00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா நடக்கிறது.பகல் 12.00 மணிக்கு கும்பம் வைத்தலும், நாளை மாலை 4.00 மணிக்கு செடல் உற்சவமும், இரவு 7.00 மணிக்கு விமானத்தில் அம்மனும், காத்தவராய சுவாமியும் புறப்பட்டு காத்தான் கழுவேறும் நிகழ்ச்சி மற்றும் வீதியுலா நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 10.00 மணிக்கு மேல் காத்தவாரய சுவாமி சமேத ஆரியமாலா கருப்பழகி திருமணமும், மாலை 3.00 மணிக்கு மஞ்சள் நீர் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
01-May-2025