உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கை கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சங்கர் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் டாக்டர் ஜெகன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரி பேராசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு பள்ளி அளவிலிருந்து கல்லுாரி படிப்பிற்கு ஒவ்வொரு மாணவர்களும் தங்களை கல்வியில் உயர்த்தி கொள்வது குறித்த கருத்தரங்கில் பேசினார்.துறைத் தலைவர் ரங்கநாதன், பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை