உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

விழுப்புரம்; விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூரில் உள்ள சிகா மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் கல்லுாரியில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.செஞ்சுருள் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு முதல்வர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் புவனேஸ்வரி வரவேற்றார். விக்கிரவாண்டி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ், முத்துராஜ், சுங்கச்சாவடி பொறுப்பாளர் சொர்ணமணி ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் லோகு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாவாடை உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை