மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்
26-Aug-2025
வானுார்; வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் செயல்படும் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டும் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி கருத்தரங்கை கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், 'சுழற்சி இரண்டில் படிக்கும் மாணவர்கள் காலை நேரத்தில் பணி செய்து, சம்பாதித்துக் கொண்டே மதிய வேளையில் கல்வி கற்க முடியும். இதற்கான வேலை வாய்ப்பு, கல்லுாரிக்கு அருகில் உள்ள டைடல் பார்க்கில் அமைந்துள்ளது' என்றார். இதில் சிறப்பு விருந்தினராக டைடல் பார்க்கின் பயிற்சி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 'இந்த கல்லூரியில் காலை அல்லது மதியம் படிக்கும் மாணவர்கள் டைடல் பார்க் வழங்கும் வேலை வாய்ப்பு பயிற்சிகளை பெற்று கொள்ளலாம். அவர்கள் பகுதி நேரம் அல்லது கல்லுாரி படிப்பை முடித்து விட்டு முழு நேரமாக இந்த நிறுவனத்தில் பணியாற்ற வேலை வாய்ப்பு மிகுதியாக உள்ளது. இதற்காக மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்,' என்றனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அதிகாரி காந்திமதி செய்திருந்தார். முகாமில் வணிகவியல் துறைத்தலைவர் தேவநாதன் நன்றி கூறினார். இந்த கருத்தரங்கில் சுழற்சி இரண்டில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
26-Aug-2025