உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

மயிலம் பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கம்

விழுப்புரம் : மயிலம் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் 'எலக்ட்ரோ ஸ்பார்க்-24' என்ற தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.மயிலம் பொறியியல் கல்லுாரியில் மாணவர்களின் திறன் வளர்க்கும் விதத்தில் நடந்த கருத்தரங்கில், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராத பல்வேறு போட்டிகள் நடந்தது.மேலும், 'ரோபோடிக்ஸ் இன்டர்நெட் ஆப் திங்ஸ்', 'எல்.இ.டி., டிஸ்ப்ளே' உள்ளிட்ட தலைப்புகளில் ஒரு நாள் பயிற்சி பட்டறையும் நடந்தது. கருத்தரங்கில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து, 650க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.நிறைவாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கலையரங்கில் நடந்தது. மின்னியல் துறை தலைவர் முரளி வரவேற்றார். கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். மயிலம் கல்விக் குழும இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் ராஜப்பன் வாழ்த்தி பேசினார்.பெங்களூருவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான 'எர்னஸ்ட் அண்ட் யங்'கின் முதுநிலை மேலாளர் தியாகராஜன் நவீன தொழில்நுட்பம் பற்றி எடுத்துரைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி ஆராய்ச்சி துறை ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், பேராசிரியர்கள் சரவணகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி