உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி திருக்குறள் பேரவை 3 நாள் இலக்கிய பெரு விழா

செஞ்சி திருக்குறள் பேரவை 3 நாள் இலக்கிய பெரு விழா

செஞ்சி,: செஞ்சி கோட்டை திருக்குறள் பேரவை சார்பில் 39 ஆம் ஆண்டாக 3 நாள் இலக்கிய பெருவிழா 15, 16 மற்றும் 17ம் தேதிகளில் நடந்தது. 15ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிரபல இதயநல மருத்துவர் சொக்கலிங்கத்தின் சிறப்பு சொற்பொழிவும், 16 ம் தேதி நடந்த இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மகளிர் பட்டிமன்றமும் நடந்தது. மூன்றாம் நாள் விழாவாக நேற்று காலை பரதநாட்டிய நிகழ்ச்சியும் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது.ம.தி.மு.க., மாநில துணை பொது செயலாளர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி, செஞ்சி பகுதியில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பல்வேறு பள்ளி மாணவ மாணவிகளுக்கும், பரத நாட்டிய மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். தொடர்ந்து திருக்குறள் ராமகனகசுப்புரத்தினத்தின் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. மாலை 6 மணிக்கு புலவர் ராமலிங்கம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், மேல் சித்தாமூர் மடாதிபதி லட்சுமி சேன பட்டாரக சாமிகள், முன்னாள் சேர்மன் ரங்கநாதன், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை திருக்குறள் பேரவை தலைவர் கோபிநாத், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் மாணிக்கம், செல்வகுமார், சேகர், கார்த்திகேயன், பாண்டியன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ