உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம்

மயிலம், -மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.விளங்கம்பாடி ஊராட்சி மற்றும் எஸ்.ஆர்.எம்., வேளாண் மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நடந்த முகாமிற்கு, ஊராட்சி தலைவர் உத்திரமணி தலைமை தாங்கினார். வேளாண் கல்லுாரி முதல்வர் ஜவஹர்லால், பேராசிரியர்கள் ராவணசந்தர், நவின்குமார், ஷீலா முன்னிலை வகித்தனர்.ஊராட்சி துணைத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். வேளாண்மை கல்லுாரி மாணவிகள் அமலா, சாருமதி துவக்க உரையாற்றினர்.பட்டுப்புழு வளர்ப்பு துறை பேராசிரியர் முருகன் கிராமங்களில் மல்பெரி செடியை பயிரிட்டு அதன் மூலம் பட்டுப் புழுவை உற்பத்தி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறுவது எப்படி குறித்து விளக்கவுரையாற்றினார்.பட்டுப்புழு வளர்த்தல் குறித்து கிராம மக்களின் கேள்விகளுக்கு வேளாண்மை கல்லுாரி மாணவிகள் சரிகா, ஆருத்ரா, சவுந்தர்யா, பிரித்தா, சபர்மதி, காயத்ரிதேவி, வித்ரா, நவநீதா பதில் அளித்தனர்.நிகழ்ச்சியில் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை