உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கோவிலில் சஷ்டி வழிபாடு

மயிலம் கோவிலில் சஷ்டி வழிபாடு

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் சஷ்டி பூஜை நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவில் சஷ்டியை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. 11:00 மணிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனைக்குப்பின், மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை