உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறு மைய கையுந்து போட்டி : அரசுப்பள்ளி முதலிடம்

குறு மைய கையுந்து போட்டி : அரசுப்பள்ளி முதலிடம்

விழுப்புரம் : அனந்தபுரம் அரசு பள்ளி கையுந்துபந்து மற்றும் கபடி குறுமைய போட்டியில் முதலிடம் பிடித்தது. விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை சார்பில், செஞ்சி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில், அனந்தபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று விளையாடினர். அதில், 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கபடி போட்டியில், அனந்தபுரம் அரசு பள்ளி குழுவினர் முதலிடமும், 17 மற்றும் 19வயதுக்குட்பட்ட ஆண்கள் கபடி மற்றும் கையுந்துபந்து போட்டியில் முதலிடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர் யூஜின்சார்லஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை