விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, மணம்பூண்டி ஒன்றியத்தில் எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணிகளை, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆய்வு செய்தார். மணம்பூண்டி ஊராட்சியில் உள்ள 69, 70, 71, 72, 73, 74 ஓட்டுச்சாவடிகளில் கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்றும் வரும் எஸ்.ஐ.ஆர்., (சிறப்பு வாக்காளர் திருத்தம்) பணிகள் குறித்தும், பாக முகவர்கள், பூத் குழு உறுப்பினர்கள் நோட்டுகள் பூர்த்தி செய்த பணிகளை, தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆய்வு செய்தார். ஒன்றிய செயலாளர் பிரபு, நிர்வாகிகள் கணேசன், சக்திசிவம், பிரபு, மணிவண்ணன், பேரூராட்சி தலைவர் அன்பு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அய்யப்பன், தகவல் தொழில்நுட்ப அணி ஆசைதம்பி பரிமளம், சரவணன், கிளைச் செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பாக முகவர்கள், பூத் குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.