மேலும் செய்திகள்
மயிலம் கோவிலில் கிருத்திகை விழா
27-May-2025
மயிலம்: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி நுாலக துறையின் சார்பில் நடந்த முகாமிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். கல்வி ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முருகன் பேசினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் குப்புசாமி, அலமேலு சிறப்புரையாற்றினர். இதில் நுாலகர்கள் தனவந்தன், பிரபாகரன் ஆய்வுரைகள் வழங்கினர். மயிலம் கல்லுாரி நுாலகர் ராம்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லூரி பேராசிரியர்கள் உட்பட கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சிவசுப்பரமணியம் நன்றி கூறினார்.
27-May-2025