மேலும் செய்திகள்
செய்தி சில வரிகளில்...
04-Oct-2024
செஞ்சி: செஞ்சியில் வேளாண் துறை சார்பில் சிறு தானிய சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு விளம்பர ஊர்தி பிரசாரம் துவங்கியது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., விழிப்புணர்வு ஊர்த்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், வேளாண் அலுவலர் செந்தில்நாதன், துணை வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர், உதவி வேளாண்மை அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுப்ரியா, காந்திமதி, உமா பிரியா, புவனேஸ்வரி, தி.மு.க., அவைத்தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
04-Oct-2024