உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது

போதையில் தாயை அடித்த தந்தையை கொன்ற மகன் கைது

செஞ்சி: செஞ்சி அருகே மது குடித்துவிட்டு, தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை, வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சேவூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அப்பாதுரை, 65. இவரது மனைவி நீலாவதி, 60. ஆடு வளர்க்கும் தொழில் செய்து வந்தனர்.அப்பாதுரை அடிக்கடி குடித்துவிட்டு வந்து, நீலாவதியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதை நாகராஜ் தட்டிக் கேட்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அப்பாதுரை, மனைவி நீலாவதியை கீழே தள்ளி தாக்கினார்.இதனால் ஆத்திரம்அடைந்த நாகராஜ், கொடுவாளால் அப்பாதுரையின் தலையில் வெட்டினார். படுகாயமடைந்த அப்பாதுரை, சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், நாகராஜ் அங்கிருந்து தப்பியோடினார். போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடிய நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை