மேலும் செய்திகள்
பைக் மோதி இளநீர் வியாபாரி பலி
21-Dec-2024
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் வ .ஊசி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்.டைலரிங் மெக்கானிக். இவரது மகன் கிருஷ்ணா,23: பிளஸ் 2 படித்து விட்டு போலீஸ் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் கார்த்திகேயன் தன்மகனிடம் படிக்க போகவில்லையா என திட்டியுள்ளார்.மனமுடைந்த கிருஷ்ணா வீட்டு ரூமில் பேன் கொக்கியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கார்த்திகேயன் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
21-Dec-2024