உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்

விழுப்புரம்: தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடக்கிறது. விழுப்புரம் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீட்டுப்பணியில் ஈடுபடும் பணியாளர்களை அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் பதிவு செய்திடும் வகையில் நேற்று 29 ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடக்கிறது. வாரியத்தில் பதிவு செய்ய 18 முதல் 59 வயது வரை உள்ள உறுப்பினர்கள் தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த ஆவணங்களுடன், ஒருங்கிணைந்த தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், ரைபில் ரேஞ்ச், வி.மருதுார், வ.உ.சி., நகர், சாலாமேடு, விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை