உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சிறப்பு முகாம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட செஞ்சி, மயிலம் தாலுகாவிற்குட்பட்ட அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு, விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது.இந்த முகாமிற்கு விண்ணப்பித்த 200 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 59 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர்.அவர்களுக்கு, மருத்துவ குழுவினர் பரிசோதித்து பிறகு சான்றிதழ் மற்றும் யு.டி.ஐ.டி., பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கினர்.முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, பேச்சு பயிற்சியாளர் அபிசேகா, செயல்திறன் உதவியாளர் முருகன், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் நெல்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி