திண்டிவனம் அரசு கல்லுாரியில் 18ம் தேதி சிறப்பு கலந்தாய்வு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்தது.கல்லுாரி வளாகத்தில் கடந்த 2 ம் தேதி முதல் நேற்று 13ம் தேதி வரை இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. முதல் கட்ட கலந்தாய்வில் 472 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றனர். பி.காம்., பி.பிஏ., மற்றும் பி.எஸ்சி., ஆகிய பாடங்களில் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்கள் இடம் மட்டும் காலியாக உள்ளது.இதர பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், புவியமைப்பியல், பி.ஏ., வரலாறு, தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் அனைத்து பிரிவினருக்கும் காலியிடங்கள் கணிசமாக உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் தவறவிட்ட மாணவ, மாணவிகள் வரும் 18ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லுாரியின் முதல்வர் தங்கராஜன் தெரிவித்துள்ளார்.