விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது மருத்துவ முகாம்
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்.மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எஸ்.பி., சரவணன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் செந்தில்குமார், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். விழுப்புரம் வரலாற்று பண்பாட்டு மைய தலைவர் செங்குட்டுவன் வரவேற்றார். முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின், கல்வி, சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து இல்லம் தேடி கல்வித்திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்' என்றார். முகாமில், போலீசார், அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர். டாக்டர் ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இ.சி.ஜி., கண், பல் பரிசோதனைகள் செய்து ஆலோசனை, மருந்துகள் வழங்கினர்.