/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் : கமிஷனர் ஆய்வு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் : கமிஷனர் ஆய்வு
திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். திண்டிவனம் நகராட்சியிலுள்ள 33 வார்டுகளில், 62 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில், பி.எல்.ஓ.,க்கள் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பேரில் வீடு வீடாக வாக்காளர் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று காலை திண்டிவனம் ராஜாங்குளம் பகுதியிலுள்ள சுப்பரமணியர் கோவில் வீதியில் நடந்த பணிகளை நகராட்சி கமிஷனர் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்காளர்களிடம் படிவம் வழங்கப்பட்டது குறித்தும், படிவத்தை பூர்த்தி செய்வது குறித்தும் கமிஷனர் விளக்கி கூறினார். ஆய்வின் போது, நகராட்சி மேலாளர் நெடுமாறன், வருவாய் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.