மேலும் செய்திகள்
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
19-Oct-2025
திண்டிவனம்: திண்டிவனத்தில் இருதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. திண்டிவனம் நண்பர்கள் லயன்ஸ் குடும்பம், சென்னை மாதா உயர் சிறப்பு மருத்துவமனை, பி.ஆர்.எஸ்., துணிக்கடை சார்பில் நடந்த முகாமிற்கு, லயன்ஸ் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் முகாமை துவக்கி வைத்தார். லயன்ஸ் சங்க இரண்டாம் துணை ஆளுநர் கமல் கிஷோர், மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன் ரமேஷ், ஆசிரியர் வெங்கடேசன் பேசினர். முகாமில், இருதய நோய் நிபுணர் ராகவ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 114 பேருக்கு பரிசோதனை செய்தனர். அதில், 15 பேர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், வீராசாமி, முன்னாள் தலைவர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
19-Oct-2025