மேலும் செய்திகள்
புரட்டாசி வழிபாடு
29-Sep-2025
மண்டல அபிஷேகம்
02-Oct-2025
விழுப்புரம்: வைகுண்டவாச பெருமாள் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் வரதாராஜபெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்தவரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல, கோலியனூர் ஸ்ரீ பூமி, நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், காலை 7:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு திருப்பதி ஸ்ரீ சீனிவாச பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில், அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள், கோவிந்தா பக்தி கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வளவனுார் அக்ரஹாரத்தில் உள்ள அமிர்தவள்ளி நாயக சமேத லட்சுமிநாராயண பெருமாள், பூவசரசன்குப்பம் லட்சுமிநாராயணபெருமாள் கோவில்களிலும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
29-Sep-2025
02-Oct-2025