உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் ஆன்மிக புகைப்பட கண்காட்சி

பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் ஆன்மிக புகைப்பட கண்காட்சி

விழுப்புரம் : வளவனுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில், பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் பிரம்மாகுமாரிகள் ராஜயோக தியான நிலையம் செயல்பட்டு வருகின்றது. 21 ஆண்டுகளாக, உலக பிரசித்தி பெற்ற ராஜயோக தியான பயிற்சி இலவசமாக பொதுமக்களுக்கு கற்றுத்தருகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இதை பொதுமக்கள் பார்வையிட்டனர்.ஏற்பாடுகளை, பிரம்மாகுமாரர் செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை