உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்பட்டு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கல்பட்டு கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம்:காணை ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் வழக்கறிஞர் கல்பட்டு ராஜா முன்னிலை வகித்தனர். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், கல்பட்டு, சிறுவாக்கூர் கிராம பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, தாசில்தார் கனிமொழி, பி.டி.ஓ.,க்கள் சிவனேசன், ஜூலியானா, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகன், முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய துணை சேர்மன் வீரராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை