உங்களுடன் ஸ்டாலின் முகாம்
திண்டிவனம் : திண்டிவனத்தில் நகராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது . தீர்த்தக்குளம் பகுதி திருமண மண்டபத்தில், நகராட்சியை சேர்ந்த 8, 9 மற்றும் 12 வது வார்டை சேர்ந்த பொது மக்களின் குறைகள் தீர்க்க நடந்த முகாமிற்கு, நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணன் முன்னிலை வகித்தார். செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான் முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி, நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், நகராட்சி பொறியாளர் சரோஜா, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சரவணன், பிர்லாசெல்வம், ஜனார்த்தனன், முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.