உங்களுடன் ஸ்டாலின் முகாம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகராட்சிக்கு உட்பட்ட 27,36,40 வது வார்டுகளுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். இதில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ், தொண்டரணி அமைப்பாளர் கபாலி, விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன், கவுன்சிலர்கள் மணவாளன், ஜனனி தங்கம், இம்ரான், இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் சுந்தர், தங்கம், முருகன், சண்முகம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி துணை அமைப்பாளர் சங்கர், அயலக அணி துணை அமைப்பாளர்கள் ரஞ்சித்குமார், ஜனார்த்தனன், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மக்களன்பன், அமைப்பாளர் ஆனந்தராஜ், வார்டு நிர்வாகிகள் கணேசன், மனோகர், சேகர், மகேஷ், அன்பு, கோடீஸ்வரன், சுரேஷ், சிவா, சீனிவாசன், பாபு, ராதாகிருஷ்ணன், தாமு, சந்திரபாலன், மோகன், கார்த்திக், பாலகுமாரன், புருஷோத்தமன், மகளிரணி நிர்வாகிகள் லதா, உமா, அனுசியா, கவிதா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.