திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை கலைக் கல்லுாரியில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் தங்கராஜன் செய்திக்குறிப்பு:கல்லுாரியில் 25-26ம் கல்வியாண்டிற்கு இளநிலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று 2ம் தேதி முதல் நடக்கிறது.இன்று மற்றும் நாளை 3ம் தேதி சிறப்பு பிரிவு (விளையாட்டு,என்.சி.சி.,முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டவை) 4ம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் நடக்கிறது. (400 மதிப்பெண்ணிலிருந்து 300 கட்ஆப் மதிப்பெண் பெற்றவர் மட்டும்)5ம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் 299 முதல் 250 கட் ஆப் பெற்றவர்களுக்கும். 6ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் நடக்கிறது. (பி.ஏ.,வரலாறு, பி.காம்., - பி.பி.ஏ., 400 முதல் 300 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்)வரும் 9ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் 299 முதல் 250 மதிப்பெண் பெற்றவர்களும், மொழி பாடப்பிரிவுகளுக்கும் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் (100 முதல் 60 வரை கட் ஆப் பெற்றவர்கள் மட்டும்) 10ம் தேதி அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் (249 முதல் 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும்).11ம் தேதி அனைத்து அறிவியல் பாட பிரிவுகளுக்கும் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.12ம் தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கு 249 முதல் 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் பங்கேற்கலாம். 13ம் தேதி கலைப்பாடப்பிரிவுகளுக்கும், மொழி பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.