உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு

ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் ஆராய்ச்சி படிப்பிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.,) படிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு நீடித்து வழங்குவதால் அதிக எண்ணிக்கையில் அவர்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடிகிறது.மேலும், முழுநேர ஆராய்ச்சி படிப்பில் சேரும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், 'முதல்வரின் ஆராய்ச்சி படிப்பு உதவித் தொகை திட்டம்' என்ற புதிய திட்டத்தின் கீழ் ஒரு பிஎச்.டி., பயிலும் மாற்றுத்திறனாளிக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இதில் பயன்பெற, மாற்றுத் திறனாளி மாணவர், இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏதாவது ஒன்றில் முழுநேர, பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக இருக்க வேண்டும்.ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தோடு, மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல்.முழுநேர, பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம், கல்வி நிறுவனத்தில் இருந்து பெற்ற ஆய்வறிக்கை, வாய்மொழி தேர்வு தேதி வழங்கியதற்கான ஆதாரம்.தமிழகத்தை பூர்விகமாக கொண்டதற்கான இருப்பிட சான்றிதழை விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ