இணைய தொழிலாளர்களுக்கு மானியத்தில் இ-ஸ்கூட்டர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிந்தவர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி செய்திக்குறிப்பு: தமிழக அரசால், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அதில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஸ்விக்கி, சொமாட்டோ, அமேசான், பிலிப்கார்ட் போன்ற இணையம் சார்ந்த தொழிலுக்கு பதிவு பெற்ற, தொழிலா ளர்கள் www.tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களும் www.tnuwwb.tn.gov.inஎன்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் சாலாமேடில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.