மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் சூறைகாற்றுடன் திடீர் மழை
08-May-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் திடீரென பலத்த காற்றோடு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் நகரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. மதியம் நேரம் வெயில் தாக்கம் அதிகரித்தது. மாலை 3.00 மணிக்கு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் மழை பெய்தது. மழை அரை மணி நேரம் வரை நீடித்தது. பின், லேசான துாரல் மழை தொடர்ந்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனைந்து கொண்டே சென்றனர். தாழ்வான பகுதி மற்றும் சாலையில் தேங்கிய மழைநீரால், சில இடங்களில் வாகன போக்குவரத்து பாதித்தது. வெப்ப தாக்கத்தில் தவித்த விழுப்புரம் பொதுமக்களுக்கு திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திண்டிவனத்திலும் மழை பெய்தது.
08-May-2025