உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோடை பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

கோடை பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மின்னணு முறையில் கோடை பயிர் சாகுபடி பரப்பு எவ்வாறு கணக்கீடு செய்வது குறித்த களப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் தலைமை தாங்கினார். முகாமில், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள் மற்றும் சுய உதவிக்குழு மகளிர்கள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் செயலி பதிவிறக்கம் செய்து, விவசாய வயல்களுக்கு சென்று பயிர் சாகுபடி பரப்புகளை கணக்கீடு செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வானுார் வேளாண்மை அலுவலர் ரேவதி, மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளித்தார். மின்னணு பயிர் கணக்கிடானது ஒவ்வொரு பருவத்திற்கும் பயிர்கள் வாரியாக சாகுபடி விவரங்களை கணக்கீடு செய்து, இந்த மொபைல் செயலில் பதிவேற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை