உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் சூப்பர் ருசி பாலகம் திறப்பு

திண்டிவனத்தில் சூப்பர் ருசி பாலகம் திறப்பு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரில் சூப்பர் ருசி பாலகம் நேற்று திறக்கப்பட்டது. திண்டிவனம் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வணிக வளாகத்தில், வின்னர் டெய்ரி நிறுவனத்தின் சூப்பர் ருசி பால் விற்பனையகம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று காலை நடந்தது. ருசி பாலகத்தின் அங்கீ கரிக்கப்பட்ட விற்பனை முகவரான பி.பி.கே., மில்க் ஏஜன்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில், ருசி பால் விற்பனையை ஏ.எல்.ஆர். ராமலிங்கம்துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள் பழனி, முன்னாள் நகர மன்றத் தலைவர் வெங்கடேசன், காட்டுசிவிரி ராதா, செல்வம், முஸ்தபா, சிவசங்கரன், சிவா உட்பட பலர்பங்கேற்றனர். சூப்பர் ருசி பால் விற்பனை நிலையத்தில், ஸ்டாண்டர்டு பால், புல் கிரீம் பால், கெட்டி தயிர், மோர், நெய், பன்னீர், ஐஸ்கிரீம், குல்பி ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டீ, காபி கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின்பெயரில் குறித்த நேரத்தில் சலுகை விலையில், இலவச டோர் டெலிவரி செய்யப்படும். சுப நிகழ்ச்சிகளுக்கு மொத்தமாக பால் தேவைப்படுவோர், 97907 02444 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ