உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுாரில் சோயா பீன்ஸ் சாகுபடி விவசாயிகளுக்கு விதை வழங்கல்

வானுாரில் சோயா பீன்ஸ் சாகுபடி விவசாயிகளுக்கு விதை வழங்கல்

வானுார்: வானுார் வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா பீன்ஸ் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் சாகுபடி செய்ய விதைகளை வழங்கி பேசினார். சோயா பீன்ஸ், 100 எக்டர் பரப்பளவில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் செயல் விளக்க திடல் அமைக்க விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு பெறப்பட்டுள்ளது.ஏக்கருக்கு 26 கிலோ விதைகள் போதுமானது. கர்நாடகாவில் உள்ள தார்வாட் வேளாண் பல்கலைக்கழகத்தில் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட தார்வாட் சோயா பீன்ஸ் 21 ரகம் 90 முதல் 95 நாட்களுக்குள் மகசூல் தரக்கூடிய குறுகிய கால எண்ணெய் வித்து பயிராகும்.ஏக்கருக்கு 1,200 முதல் 1,400 கிலோ மகசூல் தரவல்லது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களான வேர்க்கடலை, எள் பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.இதற்கு மாற்று பயிராக நடப்பு ஆண்டு 100 எக்டர் பரப்பளவில் சோயா பீன்ஸ் சாகுபடி செய்ய இணை இயக்குனர் அறிவுறுத்தினார்.வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண் அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, தங்கம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, சந்திரசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ