உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் தமிழ்கூடல் விழா

அரசு பள்ளியில் தமிழ்கூடல் விழா

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சென்னகுணம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ்கூடல் விழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் சிவானந்தம், மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சிவா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராதிகா முன்னிலை வகித்தனர். பாவேந்தர் பேரவை செயலாளர் உலகதுரை, தலைவர் ஆசைத்தம்பி, சிவக்குமார், நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், தலைமை ஆசிரியர் அருணகிரி ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கவியரங்க உரையாற்றினார். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் கவிதாகுமாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ