உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹோலி ஏஞ்சல் பள்ளியில் ஆசிரியர் தின விழா

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் ஆசிரியர் தின விழா

மயிலம்; மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார். ஹோலி ஏஞ்சல் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கீர்த்திவாசன் வரவேற்றார். இந்த விழாவில் பழனியப்பன் ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் சுரேந்தர், ஆசிரியர்கள் மாசிலாமணி, தமிழ்மணி, உமா மகேஸ்வரி, ஆகியோர் துவக்க உரையாற்றினர். பள்ளி உதவி ஆசிரியர்கள் சங்கீதா, கவிதா, ராமமூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, பானுப்பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி