மேலும் செய்திகள்
எஸ்.வி.சி.கே., பள்ளி ஆசிரியர் தின விழா
08-Sep-2025
திண்டிவனம்: ஸ்ரீராம் ஈஸ்வரி ஐ.ஐ.டி., நீட் அகாடமி கல்வி குழுமம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. ஸ்ரீராம் ஈஸ்வரி ஐ.ஐ.டி., நீட் அகாடமி கல்வி குழுமம், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி தனியார் ஓட்டலில் விழா நடத்தியது. இதில் மாணவர்களுக்கு வகுப்பறையில் எப்படி சிறப்பாகக் கற்பிக்கலாம் என்பதை சில நிகழ்வுகளுடன் விளக்கி கூறப்பட்டது. விழாவில் சென்னை லயோலா கல்லுாரி பிளேஸ்மென்ட் செல் தலைவர் பிரின்ஸ்லி மனஅழுத்த மேலாளர் அம்புஜம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் சி.இ.ஓ., முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
08-Sep-2025