உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் உடல்நலம் பாதித்து இறந்து கிடந்தார்.சிந்தாமணி வி.ஏ.ஓ., சுகுணா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இறந்தவரின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை