உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் சிக்கியது

தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் விபத்தில் சிக்கியது

செஞ்சி: செஞ்சியில் தற்காலிக டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.நேற்று காலை 11:00 மணியளவில் திண்டிவனத்தில் இருந்து மேல்மலையனுார் செல்லும் அரசு செஞ்சிக்கு வந்தது. பஸ்சை போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத் தால் தற்காலிகமாக டிரைவரான தீவனுாரை சேர்ந்த இருதயராஜ். 43; ஓட்டி வந்தார். பஸ்சில் 16 பயணிகள் இருந்தனர். செஞ்சி மார்க்கெட் கமிட்டி எதிரே வந்த போது முன்னாள் சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.இதனால் அரசு பஸ் லாரியின் பின் பக்கம் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுடன், பஸ்சின் பக்கவாட்டிலும் சேதம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக பயணிகள் காயமடைய வில்லை. பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை