உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நினைவரங்கம், சமூகநீதி மணி மண்டபம் 28ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்

நினைவரங்கம், சமூகநீதி மணி மண்டபம் 28ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், இடஒதுக்கீடு தியாகிகளுக்கான மணி மண்டபம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை சார்பில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், ரூ.4 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளாகம் 54 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில், அவரது முழு உருவச்சிலை, நினைவு அரங்கம் (400 சதுர மீட்டர்), தேசிய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் ஏ.கோவிந்தசாமி பங்கேற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்த அரிய புகைப்படங்கள், அவரது பொதுவாழ்வு வரலாற்று குறிப்புகள் மற்றும் தனி நுாலகம் (113 சதுர மீட்டர்) அமைக்கப்பட்டுள்ளது. இதே வளாகத்தில், ரூ. 5.70 கோடி மதிப்பீட்டில், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கான மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 78 ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வளாகத்தில், 449 மீட்டர் பரப்பளவில் நினைவு மண்டபம், அதில், 21 தியாகிகளின் பெயருடன் கூடிய தனித்தனியான மார்பளவு சிலைகள், அருகிலேயே சமூக நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 187 சதுர மீட்டர் பரப்பளவில் மேடை, பல்நோக்கு மண்டபம், உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தவதற்கான கழிப்பறை வசதிகள், திறந்த நிலையில், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், புல்வெளி மற்றும் மரங்களுடன் கூடிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு ரூ.9.70 கோடி செலவில் உருவாக்கியுள்ள ஏ.ஜி. நினைவரங்கம், சமூகநீதி போராளிகள் மணி மண்டபத்தை வரும் 28 ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதையடுத்து, மணி மண்டப வளாகம் அருகில், பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை