மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாதவர் மர்ம சாவு
12-Oct-2024
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிலத்தில் இறந்து கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில், நேற்று முன்தினம் காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், விசாரணை நடத்தினர்.அதில், இறந்த கிடந்த நபர், விழுப்புரம் ரங்கநாதன் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருண்ராஜ், 45; குடிப்பழக்கம் உடைய இவர், வலிப்பு நோய் பாதித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.சிகிச்சையிலிருந்த அவர், தகவல் தெரிவிக்காமல் வெளியே வந்து, விழுப்புரம் நோக்கி நடந்து வந்ததும், அப்போது சிந்தாமணி அருகே மயங்கி விழுந்து, இறந்ததும் தெரியவந்துள்ளது.
12-Oct-2024