உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில்; பொது கழிப்பிடமாக மாறிய அவலம்

செஞ்சி அரசு மருத்துவமனை நுழைவு வாயில்; பொது கழிப்பிடமாக மாறிய அவலம்

செஞ்சி; செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் மூடி வைத்துள்ள பொது வழி பகுதி பொதுக்கழிப்பிடமாக மாறியதால் நோயகளிகள் அவதியடைகின்றனர்.செஞ்சி அரசு மருத்துவ மனை செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவை சேர்ந்த பொது மக்களுக்கான பொது மருத்துவனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் அதிக அளவில் சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர்.செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு மேற்கில் ஒரு வழியும், கிழக்கில் ஒரு வழியும் உள்ளது. இதில் கிழக்கில் உள்ள வழியை பல ஆண்டுகளாக மூடி வைத்துள்ளனர். எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இங்கு, சில நேரம் ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதற்கும் வழி இருப்பதில்லை. எதிரே ஒரு வாகனம் வந்தால் ஒதுங்கி வழி விட இடம் இல்லை.பூட்டி வைத்திருக்கும் கிழக்கு பகுதி நுழைவு வாயில் தற்போது பொதுக்கழிப்பிடமாக மாறி விட்டது. மருத்துவமனை வளாகத்தை ஒட்டி உள்ள மதில் சுவர் வரை இரவு நேர கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதினால் மதில் சுவரை ஒட்டி உள்ள உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்கள் கொசு கடியாலும், துர்நாற்றத்தாலும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே மூடி வைத்திருக்கும் நுழைவு வாயிலை திறந்து முழுமைாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மருத்துவத்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை